[Intro]
வெற்றிக் கழகக் கொடியேறுது நம்ம சனத்தின் விதிமாறுது
வெற்றிக் கழகக் கொடியேறுது மக்கள் ஆசை நிஜமாகுது
வெற்றிக் கழகக் கொடியேறுது நம்ம சனத்தின் விதிமாறுது
வெற்றிக் கழகக் கொடியேறுது மக்கள் ஆசை நிஜமாகுது
[Verse 1]
தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது
மூனெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது
தமிழன் கொடி பறக்குது.. தலைவன் யுகம் பொறக்குது
மூனெழுத்து மந்திரத்தை மீண்டும் காலம் ஒலிக்குது..
சிறுசும் பெருசும் ரசிக்குது.. சிங்கப் பெண்கள் சிரிக்குது
மக்களோட தொப்புள் கொடியில் மொளச்ச கொடியும் பறக்குது
மனசுல மக்களை வைக்கும் தலைவன் வரும் நேரமிது
மக்களும் அவன மனசில் வச்சு ஆடிப்பாடி கூப்பிடுது
சிகரம் கிடைச்ச பின்னும் இறங்கி வந்து சேவை செஞ்சு
நீங்க கொடுத்த எல்லாத்துக்கும் நன்றி காட்டும் காலமிது
தமிழா தமிழா நம்ம வாழ போறமே
ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே
தமிழா தமிழா நம்ம வாழ போறமே
ஒரு கரை இல்லாத கைய புடிச்சு போகப் போறோமே
[Chorus]
தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக்
கொடி விஜயக் கொடி.. ஆதி குடிய காக்கும் கொடி
தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக்
கொடி விஜயக் கொடி.. ஆதி குடிய காக்கும் கொடி
[Verse 2]
ரத்த சிவப்பில் நிறமெடுத்தோம்.. ரெட்டை யானை பலம் கொடுத்தோம்
நரம்பில் ஓடும் தமிழ் உணர்வ உருவி , கொடியின் உருக் கொடுத்தோம்
மஞ்சள் எடுத்து அலங்கரிச்சோம்.. பச்சை நீலத்திலகம் வச்சோம்
பரிதவிக்கும் மக்கள் பக்கம் சிங்கம் வர்றத பறையடிச்சோம்
தூரம் நின்னு பாக்கும் தலை வன் காலமெல்லாம் மாறுது
தோளில் வந்து கையை போடும் தலைவன் கொடி ஏறுது
அரசரைக் கேள்வி கேட்கும் தளபதியின் காலமடி
அன்னைக்கே சொன்னோமே இது ஆளப்போற தமிழன் கொடி
[Chorus]
தமிழன் கொடி தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக்
கொடி விஜயக் கொடி.. ஆதிகுடிய காக்கும் கொடி
தலைவன் கொடி.. தர்மக்கொடி தரையின் கொடி.. வீரக் கொடி
வெற்றி வாகை சூடப்போற விஜயக் கொடி மக்கள் கொடி
[Outro]
தமிழன் கொடி பறக்குது!